தமிழகம்

அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்

திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மகளிர் மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வே. இறையன்பு, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button