தமிழகம்

கீழக்கரை அருகே ஊர்க்காவலர் சுவாமி கோயில் எருது கட்டு விழா!

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகேயுள்ள வேளானூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலர் சுவாமி கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டுவிழா நடைபெற்றது.இந்த எருதுகட்டு திருவிழாவில் 23 காளைகள் ஆடுகளத்தில் விளையாடி சுற்றுவட்டாரத்தில் இருந்து பார்ப்போருக்கு கண்கொள்ளாக் காட்சியளித்தது.
சீறி ஓடும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பக்குவமாக ஆர்வத்துடன் மாடுகளை பிடித்து அடக்கினர்.

இந்த எருதுகட்டு விழா வேளானூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமையிலும்,தெற்கு வேளானூர் கிராமத்தலைவர் சிவப்பிரகாசம்,வடக்கு வேளானூர் கிராமத் தலைவர் மலைராசு ஆகியோர் முன்னிலையிலும் கிராமக் கமிட்டியினர் அனைவரும் இணைந்து எருதுகட்டு திருவிழாவினை சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-அ.நூருல்அமீன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button