லிங்குசாமியை புறக்கணித்த நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் புதிய படம் துவங்குவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த “தி வாரியர்” படம் தோல்வியை தழுவியது., லிங்குசாமியின் கதையும் ஏற்கனவே வெளிவந்த படங்களின் தழுவல் நிறைந்த காட்சிகளாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கும் லிங்குசாமி, கதையை யோசிக்க நேரம் இருந்தும் புதுமையான கதையை தேர்வு செய்யாமல் “தி வாரியர்” படத்தில் கோட்டை விட்டு விட்டார்.
ஆகையால் நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்தால், இருக்கும் மார்க்கெட்டை இழக்க நேரிடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் என தெரிய வருகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படம் வெளியாகி தோல்வியடைந்த நிலையில், மீண்டும் சூர்யாவுடன் இணைந்து, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் படம் தயாரித்து, கணிசமான வசூலைப் பார்த்து கடனை அடைத்து விடலாம் என்ற லிங்குசாமியின் ஆசையும் தற்போது நிறைவேறாத ஆசையாகி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.