சினிமா

“மாமனிதன்” படத்தை இளையராஜா குடும்பத்திற்கு அர்பணித்த இயக்குனர் சீனுராமசாமி

யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் “மாமனிதன்”. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். வருகிற ஜூன் 24 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ-9 நிறுவனத்தின் சார்பில் நடிகரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குனர் சீனுராமசாமி, நாயகன் விஜய் சேதுபதி, நாயகி காயத்ரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்.கே.சுரேஷ் பேசும்போது… தமிழ் சினிமாவில் வாழ்வியலை கதைக்களமாக வைத்து படம் எடுக்க் கூடிய இயக்குனர்கள் தற்போது குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்த படத்தின் இயக்குனர் சீனுராமசாமி. இவரது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் இது ஒரு புது விதமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதே என பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தும் படமாக இருக்கும் என்றார்.

அதன்பிறகு பேசிய நடிகர் விஜய் சேதுபதி… யுவன் ஷங்கர் ராஜா ஒருநாள் நான் நடித்தால் அவரும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைப்பதாக கூறினார். அப்போது என் நினைவுக்கு வந்தவர் இயக்குனர் சீனுராமசாமி தான். சவாலான கருத்துக்களைக்கூட மிகவும் எளிமையாக சொல்லக்கூடிய இயக்குனர் சீனுராமசாமி. எனது படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது என்றார்.

அதன்பிறகு இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது…. இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, இந்த படம் அவர் குடும்பத்தினருக்கு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் இளையராஜா பிறந்து வளர்ந்த பண்ணைபுரத்தில் பாடல் உள்ளிட்ட பல காட்சிகளை படமாக்கினேன். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பல நடிகைகளிடம் கதை சொன்ன போது, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், தைரியமாக காயத்ரி நடப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்தப் படத்தை இளையராஜா, அவரது மனைவி ஜீவா ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப் படுத்தும் படம் தான் “மாமனிதன்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button