விதிகளை மீறும் சரக்கு வாகனங்களை, கண்டுகொள்ளாத காவல்துறை.!
பரமக்குடியில் அதிக அளவு பாரத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. தினசரி கல்வி, வேலை வாய்ப்பு என ஏராளமானோர் பரமக்குடி வந்து செல்கின்றனர்.
மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக பரமக்குடி அமைந்துள்ளதால் ராமேஸ்வரம், தேவிபட்டினம், கீழக்கரை செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பரமக்குடி வந்து தான் செல்ல வேண்டும். தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பருத்தி, மிளகாய், கருவேல மரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காலை, மாலை பள்ளி வேலைகளில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரண்டு முதல் நான்கு மடங்கு வரை வாகனங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய போக்குவரத்து காவலர்களும், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்நிலையில் பருத்தி, மிளகாய், கருவேல மரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காலை, மாலை பள்ளி வேலைகளில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இரண்டு முதல் நான்கு மடங்கு வரை வாகனங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய போக்குவரத்து காவலர்களும், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் மீது மோதியதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து காவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.