தமிழகம்

சீமானின் நலன் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை திருவெற்றியூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். இந்த செய்தி காட்டுத் தீயாக பரவியது.

அப்போது தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். கலைஞர் அண்ணா அறிவாலய திறப்பு விழா நிகழ்வில் தீவிரமாக இருந்தபோதும் சீமானின் உடல் நலன் குறித்து விசாரத்துக்கொண்டே இருந்திருக்கிறார். உதயநிதி மூலம் சீமானுக்கு ஆறுதல் கூறச் சொல்லியிருக்கிறார்.

சீமானிடம் போனில் பேச விரும்பாமல் தனக்கு நெருக்கமான ஊடக நண்பரை பேசவைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார் உதயநிதி. மருத்துவமனையிலிருந்து சீமான் வீடு திரும்பினார் என உதயநிதி கூறிய பிறகுதான் விசாரிப்பதை நிறுத்தினாராம் முதல்வர். அரசியல் கடந்து அனைவரையும் நேசிக்கும் ஸ்டாலினின் இந்த குணம் கலைஞரை நினைக்க வைப்பதாக கூறுகிறாராம் சீமான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button