தமிழகம்

நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, நமது முதல்வர் நூல் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை இராஜாஅண்ணாமலை மன்றத்தில் நவின் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் நடத்தியது.

இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக கலைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு முக்கிய பிரமுகர்கள் மூலமாக விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

இவ்விழா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா தலைமையில் இலக்கிய அணி அமைப்பாளர் எம்ஜி செல்வம் முன்னிலையில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜேஎம் ஆரூண், தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் காயல் இளவரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நமது முதல்வர் மாதம் இருமுறை இதழை எபினேசர் வெளியிட இளைய அருணா பெற்றுக்கொண்டார். இதழின் ஆசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நமது முதல்வர் இதழை வழங்கினார். இவ்விழாவில் அப்பகுதி பெண்களுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு தளபதி விருதும் நினைவுப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் கே.எம்.சிராஜூதின், தொழிலதிபர் அமித்குமார், பத்திரிகையாளர் அப்துல்மாலிக் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தொழிலதிபர் லயன் டாக்டர். எஸ்.ரவிக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

சதீஸ்முத்து

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button