தமிழகம்

கொரோனா தடுப்பூசி வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்

தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. தகவலறியும் உரிமைசட்டம் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி வீணாகுதல் சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கவேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன. இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. கொரோனா தடுப்பூசிகள் 10 டோஸ் அல்லது 20 டோஸ் என்று ஒரு குப்பியில் வரும். ஒரு குப்பியை திறந்த பிறகு நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து டோஸ்களும் போடப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் மாலையில் முடியும் போது கூடுதலாக தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படாமல் இருந்தால் அவை அடுத்த நாளுக்காக எடுத்து வைக்க முடியாது. இப்படி தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன.

தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மேலும் 8, 82,130 கோவாக்சின் வந்துள்ளன. மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.இதில் 48 லட்சத்து 7 ஆயிரத்து 148 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கையிருப்பு 4.1 லட்சம் உள்ளது. எனவே சுமார் 3 லட்சம் தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளன. மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தமிழகம் வரவுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button