ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் : எம்.எல்.ஏ சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமுதகுடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடந்தது.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிந்தாமணி, துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதன் பிரபாகர் எம்எல்ஏ திறந்து வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் இந்திரா வரவேற்றார். இதையொட்டி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்பு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம், “சுகாதாரத்துறையினர் முறையாக கிராமங்களுக்கு வந்து சேவை செய்கின்றார்களா? செவிலியர்கள் வீடுவீடாக வந்து பரிசோதனை மேற்கொள்கிறார்களா?” என்பதை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, ஒன்றிய செயலாளர் முத்தையா, ஓவியர் சரவணன், பார்த்திபனூர் செயலாளர் வினோத், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தாமரைச் செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.