தமிழகம்
அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்… : ஜூன் 1 முதல் கட்டணம் வசூல்!
சென்னையில் அம்மா உணவகங்களிலும் விலையில்லா விநியோகம் நிறுத்தப்பட்டு ஜூன் 1 முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஊரடங்கால் தவித்து வரும் ஏழை எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்களின் நலன் கருதி சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
ஊரடங்கு காலத்தில் சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புக்கு உணவுகள் வழங்கப்பட்டதாகவும், சுமார் ஒரு கோடி பேர் பயன்பெற்றதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.