ஏப்பம்விட்ட 10 லட்சம் கோடி..!
உழைக்கும் நடுத்தர வர்க்கம் வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தால், ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு வங்கி நிர்வாகம் துளைத்தெடுக்கும். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் திணறி வருகிறது.
இதில் பலர் வங்கிகளுக்கு அல்வா கொடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர். அங்கே உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இப்படி வங்கிகளை ஏமாற்றிய பேர்வழிகள் பட்டியல் 1.விஜய் மல்லையா, 2.முகில் சோக்சி, 3.நீரவ் மோடி, 4.நிசான்மோடி, 5.புஷ்பேஸ் பாட்டியா, 6. ஆஜிஷ், 7.சன்னிகலரா, 8. சஞ்சை கலரா, 9. வர்ஜா கலரா 10. ஆர்த்தி கலரா 11. சுதீர் கலரா, 12.ஐதின் மேத்தா 13. உமேஷ் பாரிக், 14.கமலேஷ் பாரிக், 15.நிலேஷ் பாரிக், 16. வினய் மிட்டல், 17.ஏகல் வியாகார்க், 18. சேட்டன் ஜெயந்திலால், 19. நித்தின் ஜெயந்திலால், 20. தீப்திவெய்ன் சேட்டன், 21 சவியாசேத், 22.ராஜீவ் கோயல், 23. அலகாகோயல், 24. லகித்மோடி, 25.ரித்தேஷ் மோடி, 26. ஹிதேஷ் பட்டேல், 27. மயூரி பென்படேல், 28. ஆஷஷ் சுரேஷ் பை.
இவர்களின் விஜய் மல்லையாவைத் தவிர மற்ற அனைவரும் வடஇந்தியர்கள், இவர்கள் ஏமாற்றிய தொகை 10 லட்சம் கோடி, இந்த பட்டியலில் ஒரு தமிழன் இல்லை. ஒரு முஸ்லீம் பெயர் கூட இல்லை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், “இந்திய பொருளாதாரம் மிசிஹி வார்டில் உள்ளது” என்று சொன்னார்.
இந்திய பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், இந்த 28 பேரை பிடித்து இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை மீட்க வேண்டும்.