நிருபரின் காமலீலை…
பத்திரிகையாளர்கள் என்றாலே சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பது இயல்பு. தற்போது, சமூகத்தை சீரழிக்கும் நபர்களின் கையில் பத்திரிகை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியர்களின் பிம்பமாக இருப்பவர்கள் அதன் நிருபர்கள்.
பத்திரிகையாளர்கள் சிலர், நாம் நான்காம் தூணின் ஓர் அங்கம் என்பதை மறந்து பல இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விளக்கமாக பார்ப்போம்.
சிவனின் மூன்றாவது கண் என்ற அடையாளம் கொண்ட பிரபல பத்திரிகை வெளிவந்துகொண்டு இருக்கிறது. முதலில் அந்த பத்திரிகை கண் என்று வெளியானது. பின்னர் லேட்டஸ்ட் கண் என்று வெளிவருகிறது. முதலே கோணல் தான். பிறகு சரியாகவா இருக்கும்?
தன்னை ஆசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அந்த நபர், தொடக்கத்தில் ஜேப்பியாரின் மூக்குத்தி பத்திரிக்கையில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு தராசு வார இதழில் புகைப்பட கலைஞராக பணியைத் தொடர்ந்தார். தராசு பத்திரிகையில் தான் தனது சாம பேத தண்ட வேலைகளை காட்டியதால் அதன் ஆசிரியர், இவரது கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அதன்பிறகு சிவனின் மூன்றாவது கண் என்ற அடையாளம் கொண்ட பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கி 1994 முதல் நடத்தி வருகிறார். இவர் தமிழ் பத்திரிக்கை உலக வரலாற்றிலேயே முதன் முதலாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெருமை இவரையே சாரும்.
மாவட்ட நிருபர்கள் மூலம் செய்தி என்ற பெயரில் தமது கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் இவர், தொடக்கத்தில் சென்னை புறநகர் காவல் ஆணையராக இருந்தவரிடம், தனது கைவரிசையை காட்டினார். ஆனால் ஆணையரோ, தனது காவல்துறை செல்வாக்கை பயன்படுத்தி இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இவரை வெளியே எடுக்க யாருக்கும் விருப்பமில்லை. பத்திரிக்கையாளர் சங்கங்களும் கைவிட்டார்கள். அதன் பிறகு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவராக இருந்த டி.எஸ்.ரவீந்திரதாஸ் என்ற தனி மனிதனின் முயற்சியால் இவரை வெளியே கொண்டு வருவதற்கான பணிகள் நடந்தன. டி.எஸ்.ஆர் தனது சொந்த முயற்சியில் பல அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முதலமைச்சராக இருந்த கலைஞரிடமும் முறையீட்டு இவரை சிறையில் இருந்து வெளியே எடுக்க உதவினார். வெளியே வந்ததும் சக பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே எம்ஏஎம் ராமசாமி நேர்முக உதவியாளர் ராஜேந்திரனிடம் தன் கை வரிசையை காட்டினார். இதன் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கினார். ஒருகட்டத்தில் எம்ஏஎம் இவரை விரட்டி விட, பல தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் இறங்கினார். இவருக்கு பெற்றோர்கள் எப்போது Money என்று பெயர் வைத்தார்களோ அப்போதிலிருந்தே இவருக்கு மணி ஒன்றே குறிக்கோளாக இருந்து வருகிறது.
இவர் எப்படி யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் சக பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமான வேலையை இவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தனது சமுதாயத்தை சார்ந்த பலரிடம் இவரது கைவரிசையை காட்டி பல இடங்களில் உதை வாங்கி இருக்கிறார். தன்னுடைய தைலாபுரம் தோட்டத்திற்கு வரக்கூடாது என்று பிரபல கட்சியின் நிறுவனர், இவருக்குத் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக அதிமுக பாமக போன்ற கட்சியினர் இவருக்கு எதிராக கச்சை கட்டி நின்றன. இவர் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார். அதற்கு உரிமம் வாங்கி இருக்கிறாரா என்று தெரியவில்லை. தன்னை யாராவது சந்திக்க வந்தால் துப்பாக்கி வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்துவாராம். இவர், அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய பத்திரிகையை தனது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.
இவர் மீது பல மோசடி வழக்கு, பணம் கேட்டு மிரட்டல், துப்பாக்கியை காட்டி மிரட்டல் என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது எல்லாம் சேர்த்து தான் அப்போதைய ஆணையர் அவர்கள் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். சிறையில் இவருக்கு சிறப்பு கவனிப்புகள் நடந்தன. துவைத்து கிழித்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் காவல்துறை மன்னித்து விடுவதாக இல்லை. ஆனால் இவர், இப்போதும் தனது மாவட்ட நிருபர்கள் மூலம் கட்டிங் போடுவதிலும் கமிஷன் வாங்குவதிலும் தான் குறியாக இருந்து வருகிறார்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எழுதவும் தெரியாமல், முழுமையாக படிக்கவும் தெரியாமல் தமிழ் எடிட்டர் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், வெகு விரைவில் மீண்டும் சிறைக்கு போவது உறுதி. திமுக ஆட்சி காலத்திலேயே இவர் சிறைக்கு சென்றார். ஜெயலலிதா பலமுறை இவரை சிறைக்கு அனுப்பி வைத்தார். இப்போது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளார். தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகள் இவருக்காக கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன என்றே கூறலாம். இவர், கலைஞரை சந்திக்க பலமுறை முயன்றார். ஆனால், இவரைப் பார்த்து பேச கலைஞர் மறுத்துவிட்டார். இப்போது ஸ்டாலினை சந்திக்க விரும்பினார். ஆனால் ஸ்டாலின் அவர்களோ, “ஐயோ அவனா” என்று விரட்டி அனுப்பிவிட்டார். இவரது நிருபர்கள் சிலர், தீவிரவாதிகளின் கைக்கூலிகள் என்பதும், புனைபெயரில் தான் செய்திகள் எழுதுவார்கள் என்பதும், கூடுதல் தகவல்கள்.
இவரது நிருபர்களில் சிலர், பெண்களை காமவெறி பிடித்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை தகவல். இதில் ஒரு நிருபர் குறித்து பார்ப்போம்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பெண்ணை, இந்த பத்திரிகையின் கோவை நிருபர் மாரீஸ்வரன், தன்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என்று கூறி, காமவலை வீசியது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் உண்மைத்தன்மையை அறிய நேரடியாக களத்தில் இறங்கியது, நமது செய்தி குழு.
நமது தேடலில் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல தகவல்கள் கிடைத்தன. உனக்கு வீடு மற்றும் தோட்டம் தருகிறேன், எனக்கு சின்னவீடாக வந்துவிடு. எனது சொத்தில் பாதியை உனக்கு தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் வந்துள்ளார். இவரால் மிரட்டப்பட்ட பெண் நேர்மையானவர் என்பதாலும், இதை வெளியில் கூறினால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி, அமைதியாகவே பதிலளித்து வந்துள்ளார். ஆனாலும் அந்த பெண்ணிற்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார், நிருபர் மாரீஸ்வரன். அந்த பெண்ணின் தாயிடமும் இதே டார்ச்சர் கொடுத்து, மகளை என்னுடன் அனுப்பு என்று மிரட்டியுள்ளார். கடந்த மாதம் அந்த பெண்ணின் அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அண்ணனின் திருமணத்தில் ஏதும் பிரச்சினை வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், இந்த காமவெறி பிடித்த நிருபர் குறித்து வெளியில் கூறாமல் அந்த பெண்ணின் குடும்பம் இருந்தது.
தற்போது பாதிக்கப்பட்ட அந்த பெண் எங்களை தொடர்பு கொண்டு, காம வெறி பிடித்த நிருபர் பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்தனர். அந்த நிருபர் உரையாடிய ஆடியோ பதிவை எங்களுக்கு வழங்கினர். அதில் கேட்கவே காதுகூசும் வகையில் தெளிவாக உள்ளது. இதை புகாராக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். அப்போது, அந்த காமவெறி பிடித்த நிருபர் மூலம் கொலை மிரட்டல் வரலாம். அதற்காக தான், பத்திரிகையாளர்களாகிய தங்களது உதவியை நாடுகிறோம் என்று தெரிவித்தார்கள். நாங்களும் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி விடைபெற்றோம்.
குற்றம் யார் செய்தாலும், குற்றம் குற்றமே. நெற்றிக்கண் திறப்பினும் காமம் காமமே.. இதற்கு தீர்வு இல்லையெனில், மீண்டும் பேனா முனை பேசும்..
-ராபர்ட் ராஜ்
Super actor super news Frank Shankar ji