ராமநாதபுரம் – விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் எஸ்.ஐக்கு ஆயுள் தண்டனை
ராமநாதபுரத்தில், விசாரணைக் கைதி, காவல்நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், காவல் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த சையது முகமதுவை, சத்தேகத்தின் பேரில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, காவல் நிலயைத்தில், சையது முகமதுவை, சார்பு ஆய்வாளர் காளிதாஸ் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், காளிதாஸை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸுக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி சண்முகம் உத்தரவிட்டார். அபராதத் தொகையை, சுட்டுக்கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்திற்கு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.