சித்த மருத்துவராக வந்து ஆங்கில மருத்துவராக மாறி மக்களை கொள்ளும் போலி மருத்துவர்
சென்னை திரு.வி.க. நகர் அடுத்த கென்னடி ஸ்கொயர் சாலையில் சித்தா கிளினிக் என்று நடத்தி வருபவர் சிந்து. இவர் BSMS படித்து முடித்ததாக பெயர் பலகையில் உள்ளது. ஆனால் இவரோ ஆங்கில மருந்தை பயன்படுத்தி வருவதாகவும் அதில் அங்கு உள்ள சிலருக்கு தெரிய வந்துள்ளது. அதையும் மக்கள் குணமடைய ஏதோ செய்கிறார்கள் என்று இப்பகுதி மக்கள் கடந்து சென்றனர்.
ஆனால் இவரின் மருத்துவ சிகிச்சையால் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகியும் அது அருகில் உள்ள K9 காவல் நிலையத்தில் FIR ம் இந்த கிளினிக் மீதும் மற்றும் அதை நிர்வகித்து வரும் சிந்து என்பவர் மேலும் வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள், எட்டாம் வகுப்பு படித்த ஒருவரை வைத்து கிளினிக் நடத்துவதாக கூறுகின்றனர்.
அப்பகுதி மக்கள் ஏன் இப்படி செய்து வருகின்றீர் என்று கேட்டால் கணவன் பெயரில் அடி ஆட்களை வைத்து மிரட்டி வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இங்கு வரும் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்..
சாதாரண மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை அனுபவித்து வரும் இவர் மருத்துவரா? இல்லையா? என்பது கூட இன்னும் தெரியாத நிலையில் தொடர்ந்து ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வரும் இவரை உண்மையான மருத்துவர்கள் விரட்டுவார்களா என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசும், மருத்துவ துறையும் இது போன்றவர்களை களை எடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.