ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மாவட்டத்தை விட்டு மாவட்டம் அரசு மதுபானக் கடையில் சோதனையிடுவதை நிறுத்த வேண்டும். புரோக்கர்களை வைத்து டாஸ்மாக் பணியாளர்களிடம் வசூல் செய்யும் அதிகாரவர்கத்தினரை ஒழிக்க வேண்டும்.
ஏரியா மேற்பார்வையாளர் என்ற பெயரில் புரோக்கர்களை வைத்துக்கொண்டு மாதாந்திர கையூட்டு,இடம்மாறுதல், கடை மாறுதல் கேட்கும் பணியாளர்களிடம் அடாவடியாக லஞ்சம் கேட்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டதில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் கோதண்டம், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உட்பட ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.