சினிமா

சவுந்தர்யாவின் நீச்சல் குள பட சர்ச்சை… : ஷாக் ஆன ரஜினி

நீச்சல் குளத்திலிருந்து சவுந்தர்யா விசாகன் வெளியிட்ட படம்… சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!
ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் அடிக்கடி சமூக வலை தளத்தில் ஏதாவது படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார்.
இப்போதும் ஒரு நீச்சல் குள படத்தை பதிவிட்டதால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குழந்தைகளுக்கு நீச்சல் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கருத்தை எழுதி அதற்கு ஏற்றார் போல தன் மகன் வேத் உடன் தானும் நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டு ஒய்யாரமாக போட்டோவும் பதிவிட்டார்.
இதுதான் எல்லா சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நேரத்தில் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் அவசியமா என கடுமையான கமெண்ட்கள் வந்ததால் உடனடியாக அந்த பதிவை நீக்கினார் சவுந்தர்யா.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்பார் ஷூட்டிங் முடிந்து மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதே நேரம் மகள் நீச்சலுடையில் தண்ணீருக்குள் ஒய்யார போஸ் கொடுத்து மக்களின் கண்டனத்தை வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button