ஆளுநர் மாளிகையில் கொடுத்த ஆதரவு கடிதத்தில் மோசடி ! ஆரம்பமே மோசடி, தப்பித்தவறி ஆட்சி அமைத்தால் மக்களின் நிலைமை ?.!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கோரி, மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு காங்கிரஸ் ( 5 எம்எல்ஏ ), கம்யூனிஸ்டுகள் ( தலா 2 ), ( அமமுக 1 ) என 117 எம்எல்ஏக்கள் ஆதரவு என கடிதம் கொடுத்துள்ளனர். அதில் அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பெயரில் கொடுக்கப்பட்ட கடிதம் மட்டும் நகலாக ( ஜெராக்ஸ் ) இருந்துள்ளது. ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கேட்டதற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிள்ளார். ஒரிஜினல் கடிதம் பிறகு வந்து தருவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடிதங்களும் வந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த தகவல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு தெரிந்ததும், ஆளுநரை சந்தித்து அப்படி ஒரு கடிதம் நானோ, மன்னார்குடி எம்எல்ஏ காமராஜோ வழங்கவில்லை என தெரிவித்ததோடு, எம்எல்ஏ காமராஜை காணவில்லை. அவரை கண்டுபிடிக்குமாறு ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பிறகு தமிழக டிஜீபி காமராஜை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். பின்னர் இரவு 12 மணிக்கு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன், காமராஜ் த,வெ.க வுக்கு எந்தவித கடிதமும் வழங்கவில்லை எனவும், த.வெ.க வினர் ஆளுநர் மாளிகையில் கொடுத்த கடிதத்தையும் பத்திரிகையாளர்களிடம் படித்துக் காட்டினார்.

மேலும் தூய சக்தி என கூறிக்கொள்ளும் தவெக மோசடி சக்தியாக மாறி, அமமுக பெயரில் போர்ஜரி கடிதம் வழங்கியுள்ளது. ஆட்சி அமைக்கும் முன்பாகவே மோசடி செயலில் ஈடுபடும் இவர்கள் ஆட்சி அமைத்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா ? ஆகையால், அவர்கள் கொடுத்த அனைத்து ஆதரவு கடிதத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் விசாரிக்க வேண்டும். அதோடு அதன் பின்னணியையும் விசாரித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக மோசடியாக கடிதம் கொடுத்தவர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




