அரசியல்

தவெக ஆதரவு கேட்பதற்கு கூச்சமாக இல்லையா ?.! பிளவுபடும் விடுதலை சிறுத்தைகள் !

தமிழக வெற்றிக் கழககத்திற்கு ஆட்சி அமைக்க போதிய பெரும்பாண்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு தலா இரண்டு இடங்களில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் ஆதரவை பெறுவதற்கு, த.வெ.க வினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் மூன்று கட்சியினரும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், முதன்மைச் செயலாளர் ஷாநவாஸ் ஆகியோர் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிந்தனைச் செல்வன் பேசுகையில், திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்களிடம் ஆதரவு கேட்பதற்கு கூச்சமாக இல்லையா ? வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பி ஆதரவு கேட்பதை என்னவென்று சொல்வது ? என காட்டமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதேபோல் ஷாநவாஸ் கூறுகையில், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காத பட்சத்தில், ஆளுநரை எதிர்க்க நடிகர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா ? நடிகர் விஜய் தனக்காகவே குரல் கொடுக்க தைரியம் இல்லாதவர், இதுவரை பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவர் என்பன போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னனி தலைவர்கள் விஜய்க்கு எதிராக பேசியிருப்பது, ஆதரவு அளிக்க விரும்பாத மனநிலையில் இருப்பதையே உணர்த்துகிறது. இதையும் மீறி திருமாவளவன் நடிகர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தால், பெரும்பாலான நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது என அக்கட்சினர் மத்தியில் பேசப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button