விமர்சனம்

குழந்தைகள் விரும்பும் நாயகன் லெஜன்ட் சரவணன் ! “லீடர்” படத்தின் விமர்சனம்

லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜன்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ் புட், லால் பாகுபலி பிரபாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லீடர்”.

கதைப்படி.. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் லோக்கல் தாதா சால்ட் ( பாகுபலி பிரபாகரன் ). சர்வதேச கேங்ஸ்டர் டெவில் ( சந்தோஷ் பிரதாப் ) அமோனியம் நைட்ரேட் மூட்டைகளை கண்டெய்னர் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்புகிறார். துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. அதைப்பற்றி விசாரிக்கும் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இதுசம்பந்தமாக சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் இந்திரா ( ஆண்ட்ரியா ) மேல் அதிகாரிகளிடம் சில தகவல்களை கூற, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. பின்னர் ரகசியமாக துறைமுகத்தில் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையில் துறைமுகத்திற்குள் சர்வ சாதாரணமாக சென்றுவரும் சக்திவேலை ( லெஜன்ட் சரவணன் ) பயன்படுத்த நினைக்கிறார் ஆய்வாளர் இந்திரா. ஆனால் சக்திவேல் மறுத்து விடுகிறார்.

சக்திவேல் பெண் குழந்தையுடன், குழந்தைதான் உலகம் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், அந்த குழந்தையை சால்ட் ஆட்கள் கடத்தியதாக தெரிய வருகிறது. சக்திவேல் அந்த கும்பலை அடித்து உதைத்து குழந்தையை மீட்டு வருகிறார்.

இந்த சமயத்தில் சக்திவேல் சால்ட் கும்பலை கையாண்ட விதங்களை வைத்து யார் இந்த சக்திவேல், இவரது பின்னனி என்ன ? இவருடன் இருக்கும் குழந்தை யார் ? என்கிற தகவல்களை தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை….

காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைவரும் விரும்பும் மாஸான திரைக்கதையை தேர்வு செய்து, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்திருக்கிறார் லெஜன்ட் சரவணன். இந்த படத்தின் மூலம் குழந்தைகள் விரும்பும் நடிகராகவும் மாறியிருக்கிறார். எந்தவிதமான கதாப்பாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் லெஜன்ட் சரவணன்.

அதேபோல் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button