தமிழகம்
அதிமுக ஆட்சியில் நாட்டையே உலுக்கிய வழக்கு ! போலீசாருக்கு அபராதத்துடன் மரண தண்டனை !

அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஒன்பது போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் ஆய்வாளர் ஶ்ரீதருக்கு 15 லட்சம் அபராதத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விவாதத்தின் போது, குற்றவாளிகளுக்கு குடும்பம் இருப்பதால் தண்டனையை குறைக்க வேண்டும் என விவாதித்த போது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது. ஆயில் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு பயம் இருக்காது. ஈவு, இரக்கம் இல்லாமல் கொடுரமாக மரணம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இவர்கள் திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்கவேண்டும். அபராதத்துடன் மரண தண்டனை விதிப்பதே சரியாக இருக்கும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



