தமிழகம்

600 கோடி மோசடி புகாரில் சிக்கிய தவெக வேட்பாளர் கைது !. ?

தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களில் 140 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, அரசுக்கு 600 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையது புர்ஹானுதீன் ஜிஎஸ்டி அதிகாரிகளால் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

போலி நிறுவனங்களை உருவாக்கி 600 கோடி வரி ஏய்ப்பு செய்த புகாரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜூனைத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது மடிக்கணினி, கைபேசியை ஆய்வு செய்தபோது, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சையது புர்ஹானுதீனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சையது புர்ஹானுதீன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் இதுவரை நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஜிஎஸ்டி ஆணையரக சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சையது புர்ஹானுதீன் வழக்கு தொடர்ந்து தன்னை விடுவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஐந்தாவது முறையாக ஏப்ரல் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் இவரது உறவினர் செய்யது அஸ்பத்துல்லா என்பவரும் முக்கிய நபர்களாக செயல்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button