தமிழகம்

எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக 1.30 கோடி மோசடி செய்த திமுக நிர்வாகிகள் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாவின் கணவர் நாகலிங்கம் என்பவர் பெரியகுளம் நகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ( தனி தொகுதி ) போட்டியிட திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.

இதைத் தெரிந்து கொண்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் கார்த்தி என்பவர் தன்னுடைய கூட்டாளிகளான ஆசிக் ராஜா, அபுதாகிர் ஆகிய இருவர் மூலமாக நாகலிங்கம் கைபேசிக்கு whatsapp மூலம் சென்னையில் இருந்து பேசுவது போல் பேசி மோசடி நாடகம் அரங்கேற்றி சுமார் 1.30 கோடி ரூபாயை மூவரும் சேர்ந்து நாகலிங்கத்தை ஏமாற்றி வாங்கியுள்ளனர்.

தலைமறைவான அபுதாஹிர்

தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் நாகலிங்கம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனு மீது துரித விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கார்த்திக், ஆசிக்ராஜா இருவரையும் கைது செய்து சுமார் 84 லட்சம் ரூபாயை கைப்பற்றியதோடு, இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் அபுதாஹிர் மட்டும் தலைமறைவாகி உள்ளார் அவரையும் காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button