நடிகர்கள் ஶ்ரீ காந்த், கிருஷ்ணா கைது !.? விசாரணை வலையத்தில் பிரபல நடிகர்கள் !

சமீபத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிமுக பிரமுகர் பிரசாத் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அதிமுகவிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. போலீசார் விசாரணையில் பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர்கள், ஶ்ரீ காந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்து விசாரித்து வந்தனர்.
முதற்கட்டமாக நடிகர் ஶ்ரீ காந்தின் இரத்த பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தி சோதனை செய்ததில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் நடிகர் ஶ்ரீ காந்த் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளைச் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த போதைப்பொருள் பயன்பாட்டில் பிரபல நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் வேலையில்லாத பிரபலமான முன்னாள் நடிகர்களை ஒன்றிணைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய போதை பொருள் புழக்கத்துடன் கூடிய “கிளப்” ஒன்றை நடிகர் ஷாம் நடத்தி வருகிறார் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே !
மேலும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் நுங்கம்பாக்கம் காவல்துறையினரும் இந்த விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு நேர்மையாக விசாரணை மேற்கொண்டால், தமிழ் சினிமாவில் மேலும் பல சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என உறுதியான தகவல்களும் சினிமா வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.