புதுக்கோட்டை மாவட்டத்தில் அஇஅதிமுக அரிமளம் ஒன்றிய சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கடையக்குடி ஷி. திலகர் முன்னிலையிலும் மாவட்ட செயலாளர் வைரமுத்து மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலும் நடைபெற்றது.
இந்த பிரமாண்ட விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.. தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
இந்த விழாவில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “கயவர்கள் போல டிடிவி தினகரன் கட்சியை சார்ந்த தொண்டர்களும் திமுக தொண்டர்களும் உங்களிடம் கபட நாடகம் நடத்தி உங்களை தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்வார்கள்.. ஆனால் நாம் அதற்கு எல்லாம் துணை போக கூடாது எனவும் நாடாளுமன்ற தேர்தல் 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் தமிழக முதல்வர், துணை முதல்வர், பாரதப பிரதமர், கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் வெற்றி பெறுவது உறுதி” என்று ஆவேசமாக பேசி பிரசாரத்தை தொடங்கினார்..
இந்த பொதுக்கூட்டத்தில் அஇஅதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.