வீடியோ

பல்லடத்தில் தத்துவ குடிமகனின் வைரல் வீடியோ…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரவு பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் தள்ளாடியபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஆவேசமடைந்த குடிமகன் தமிழ்நாடு மோசம் என முழக்க மிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் தனது பெயர் லோகநாதன் எனவும் சாராயக் கடையை மூடச்சொல்லுங்க நான் நல்லா இருப்பேன் எனவும், குடிச்சா மைண்டே சேஞ்ச் ஆகுது என முழக்கமிட்டபடியே போக்குவரத்து மிகுந்த சாலையில் உயிரை பணயம்.வைத்து சாகசம் செய்தார்.

குடிமகனின் ஆட்டத்தை சாலையில் கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கினர். போதை தலைக்கேறி ரகளை செய்யும் குடிமகன்கள் மத்தியில் சாராயக்கடையை மூடினால் நல்லா இருப்பேன் என குடிமகன் பேசிய தத்துவத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button