மாவட்டம்
சட்ட விரோதமாக இயங்கிவரும் தார் தொழிற்சாலையை மூட விவசாயிகள் கோரிக்கை !

திருப்பூர் மாவட்டம் பல்லடதை அடுத்த மாதாப்பூரில் எவ்வித அனுமதியும் பெறாமல் விவசாய நிலத்தில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம், தாராபுரம் சாலையில், மாதாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை உகாயனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் அமைத்து தார் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தார் தயாரிக்கும்போது வெளியேறும் நச்சுப் புகையினால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதோடு கோழிப்பண்ணை, கால்நடைகள் கடுமையாக பாதிக்கும் எனவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




