நினைத்த நேரத்தில் ஆளுநரை சந்திப்பதற்கு, ஆளுநர் மாளிகை ஒன்றும் பனையூர் கட்சி அலுவலகம் இல்லையே !

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 107 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அமைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் வழங்கியிருந்தார். ஆனால் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.
மேலும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் என 8 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சேர்த்து 120 உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார் நடிகர் விஜய். ஆனால் ஆளுநரை சந்திக்க அனுமதி வழங்காத நிலையில், ஆளுநர் மாளிகைக்கு சென்ற நடிகர் விஜய் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
மேலும் ஆளுநர் மாளிகை ஒன்றும் பனையூர் கட்சி அலுவலகம் இல்லையே நடிகர் விஜய் நினைத்த நேரத்தில் செல்வதற்கு என ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.




