தமிழகம்

திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமல் !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கமல்ஹாசன் கட்சியின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதாக தெரியவந்தது. ஆனால் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மக்கள் நீதி மையம் வரவிருக்கும்  சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்று முழு மனதாக தீர்மானித்துள்ளோம். இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தையும் பேணி வருகிறோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை எனவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சி அவசியத் தேவை. கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பு தான் முதன்மையானது. ஆதலால் திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். எனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளை உரித்தாக்குகிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button