கோவை பத்திரப் பதிவுத்துறையில் அரங்கேறிய அதிகாரிகளின் முறைகேடுகள் ! மௌனம் காக்கும் அரசு !

Share

தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருப்பவர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இவர் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த தனபாலின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த 5/6/2026 அன்று தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு பதிவு சார்நிலை பணி சார்பதிவாளர்கள் மாற்றம் நியமனம் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்று நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டார். இவ்வாறு வெளியிடப்பட்ட பணியிட மாறுதல் பட்டியலில் தமிழகத்தில் சுமார் 54 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பத்திரப்பதிவு பணிகளில் நியமிக்க கூடாது என்பது தனிக்கதை.

ஆனால் பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அருள்சாமி என்பவரும் இவருக்கு அடுத்தபடியாக ஆல் இன் ஆளாக கொலோச்சிக் கொண்டிருக்கும் மற்றொரு உதவியாளரான சுதா மாலியா என்பவரும் சேர்ந்து கொண்டு பதிவுத்துறை செயலாளரும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவரான குமரகுருபரன் ஐ.ஏ.எஸிற்கு தெரியாமல் பெரிய மால் பிராக்டீஸ் ஒன்றை அரங்கேற்றம் செய்து உள்ளார்களாம். திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் கை பாவையாக உலாவி கொண்டிருந்த அருள்சாமியை எப்படி பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யின் நேர்முக உதவியாளராக கொண்டு வந்தார் முன்னாள் அமைச்சர் மூர்த்தி. 

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

பத்திரப் பதிவுத்துறைக்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராகவும்,
பதிவுத்துறை ஐ ஜி யாக அருண் சுந்தர் தயாளன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல் பத்திர பதிவுத்துறை செயலராக குமரகுருபரன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்படி ஒட்டு மொத்தமாக பதிவுத்துறைக்கு புதிய நபர்கள் வந்தாலும் பழைய நபர்களான டிஐஜி கேடர் நேர்முக உதவியாளரான அருள்சாமி, சுதா மாலிகா ஆகிய இருவர் மட்டும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் பழைய ஆட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தமிழகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் சுமார் 215 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 54 பேர் விஜிலன்ஸ் வழக்கில் சிக்கி உள்ளவர்கள். இவர்களில் கணிசமானவர்களை பணியிட மாறுதல் செய்து சகாப்தம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் விசுவாசியான உதவி பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள பிரபாவதி.

பிரபாவதி

இதில் இவருக்கு ஆல் இன் ஆளாக செயல்பட்டவர்கள் கோவை தெற்கு மாவட்டம் ஆடிட் டி.ஆர். சிவராஜ் என்பவரும் ஒருவர்.! அத்துடன் முன்னாள் ஓய்வு பெற்ற கூடுதல் ஐ.ஜி. ஜெகதீஷ் என்பவரும் துதி பாடியுள்ளார். அதாவது உதவி பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள பிரபாவதி AIG என்பவர் எப்படி கோவை மாவட்டத்திற்குள் வந்தார் என்பதை பார்ப்போம்…
சென்னையில் பத்திரப்பதிவு அதிகாரியாக பணிபுரிந்த பொழுது 2 கிரவுண்ட் இடத்தை போலி நபர்கள் மூலம், வேறு ஒருவருக்கு கிரயம் செய்து விட்டாராம் பிரபாவதி. இத்தகவல் ஒரிஜினல் உரிமையாளருக்கு தெரியவர, அவர் சென்னை பெருநகர காவல் துறையில் புகார் செய்துள்ளார். புகாரியின் அடிப்படையில் புரோக்கர்கள் சில பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அந்த காலி இடத்தை கிரயம் செய்த பத்திரப் பதிவாளர் பிரபாவதி மீது நடவடிக்கை எடுத்த பொழுது, அப்போதைய பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தியிடம் சரண் அடைந்துள்ளார். பின்பு நடந்த விவரங்களை முழுமையாக கேட்டறிந்து விட்டு நான் உனக்கு உதவி செய்கிறேன், எனக்கு நீ என்ன தருவாய் என்று கேட்க அப்பொழுது பிரபாவதி நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்று பயபக்தியுடன் கூறினாராம். அதன் பின்பு பிரபாவதியின் குடும்ப சூழ்நிலையை தனது ஒற்றர் படை மூலம் தெரிந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மூர்த்தி, சென்னை குற்றப்பிரிவு போலீஸார் கைது நடவடிக்கையில் இருந்து பிரபாவதியை காப்பாற்றி கோயம்புத்தூருக்கு வழி அனுப்பி வைத்துள்ளார். கோவைக்கு வந்த பிரபாவதி பத்திரப் பதிவுத்துறையில் ஆடிட் பிரிவில் பணியில் சேர்ந்தாராம்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி

கோவை மாவட்ட பத்திரப் பதிவுத்துறையில் ஆடிட் பிரிவில் பிரபாவதி தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.  பிரபாவதியை கேள்வி கேட்க யாரும் முன் வருவதில்லை, அத்துடன் அவர் பணிக்கு வருகிறாரா ? வரவில்லையா ? என்று கூட அப்போதைய மாவட்ட பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கு கூட தெரியாதாம். ஏதாவது விஷயம் என்றால் பிரபாவதிக்கு அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தாராம் பிரபாவதி என்று நம்மிடத்தில் மேற்படி தகவலை கூறுகிறார்கள் கோவை மாவட்ட பத்திர பதிவுத்துறை ஊழியர்கள் சிலர்.

கோவை மாவட்ட பத்திரப் பதிவுத்துறைக்கு வந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், பிரபாவதியை இன்று வரை யாரும் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையில் உள்ளார்களாம். முன்னாள் கூடுதல் ஐஜி ஆக இருந்த ஜெகதீஷ் என்பவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இன்னமும் கோவை மாவட்ட பத்திர பதிவாளர்களை மிரட்டி உருட்டி அன்றாட செலவுகளை கல்லா கட்டிக் கொண்டு வருகிறாராம். முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு வாங்கி கொடுக்கும் நபர்களில் ஒருவராக ஜெகதீஷ் இருந்து வந்தாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் யாருக்காவது பணியிட மாறுதல் வேண்டும் என்றால் ஜெகதீஷ் என்பவருக்கு அவர் கேட்கும் தொகையை கொடுத்து விட்டால் போதும், உடனே அவர்களுக்கு தேவையான பணியிடங்களை வாங்கி கொடுத்து விடுவாராம். இதில் முன்னாள் அமைச்சருக்கு பாதி, மீதி என பங்கு பிரித்துக் கொள்வாராம்.

அந்த வகையில் ஆடிட் பிரபாவதி உடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஜெகதீஷ் இன்று வரை பிரபாவதி தொடர்பில் இருந்து வருகிறாராம். பணி ஓய்வு பெற்ற கூடுதல் ஐஜி ஜெகதீஷ், இன்று கோவை மாநகர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் வேலன் காபி மேல் மாடியில் தனி அறை அடுத்து ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்த்துக் கொண்டு வருகிறாராம். தற்போது பார்ம் ஹவுஸ் என்ற பெயரில் மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற இடங்களில் அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட ஏரியா சார் பதிவாளர் அலுவலர்களிடம் பேரம் பேசி காய் நகர்த்தி வருகிறாராம். இந்த சட்ட விரோத செயலுக்கு உடன்படாத சில நேர்மையான பத்திர பதிவாளர்களை கோவையில் உள்ள உதவி பத்திரப் பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள பிரபாவதியிடம் கூறி, அருள்சாமி மூலமாக பணியிட மாறுதல் செய்து வருகிறாராம்.

உதவி பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள பிரபாவதி மேடத்திற்கு இன்னொரு அல்ல கையான கோவை தெற்கு ஆடிட் ( டி.ஆர்.) சிவராஜ் என்பவரும் ஒருவர். இவர் நீலகிரி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மூக்கை நுழைத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது உறவினர் ஒருவர் சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியில் இருக்கும் பொழுது கோடநாடு விவகாரத்தில் சிவராஜ் சிக்கியதை அறிந்து தனக்குரிய நபர்கள் மூலமாக சிவராஜ் காப்பாற்றப்பட்டாராம் என்று நம்மிடத்தில் தகவலை கூறுகிறார்கள் பத்திர பதிவாளர் ஒருவர்.

ராமமூர்த்தி

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோவை புறநகர் அன்னூர் சார் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராமமூர்த்தி என்பவர்  மேட்டுப்பாளையத்தில் பணிபுரிந்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது கொடுக்க வேண்டியதை கொடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் பத்திரப்பதிவாளராக சென்று விட்டாராம் ராமமூர்த்தி என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் மேட்டுப்பாளையம் பத்திரப்பதிவு எழுத்தர்கள் சிலர்.

இவரைப் போன்று  வெங்கடேஸ்வரன் என்பவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு நிலுவையில் இருக்கிறதாம். தற்போது வெங்கடேஸ்வரன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பணியிட மாறுதல் வாங்கிக் கொண்டு வந்துள்ளாராம்.
அவினாசி பத்திரப்பதிவில் பதிவாளராக இருந்த உதயசங்கர் தற்போது வடவள்ளி பத்திரப்பதிவு துறை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வின்சென்ட் ரீத்தா என்பவர் முதலில் மதுக்கரை பத்திரப்பதிவில் பணிபுரிந்து வந்தார் பின்பு பெரியநாயக்கன்பாளைம் பத்திர பதிவிற்கு சென்று கல்லா கட்டினார் மறுபடியும் கொடுக்க வேண்டியதை கொடுத்து மதுக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மறுபடியும் வந்துவிட்டாராம். இவரைப் போன்று சுரேந்தர் குமார் என்பவர் கோவை தெற்கு பொள்ளாச்சி சார் பதிவாளராக பணிபுரிந்து வந்தார் தற்போது கோவை தெற்கு பீளமேடு சார்நிலை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைப் போன்று பீட்டர் மைக்கேல் என்பவர் சார் பதிவாளராக திருப்பூரில் பணிபுரிந்து வந்தார் தற்போது கோவை தெற்கு பொள்ளாச்சியில் சார் பதிவாளராக பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஸ்வரி என்ற சார்பதிவாளர் தொண்டாமுத்தூர் மற்றும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து விட்டு தற்போது தனது பண பலத்தால் ( பகரான்மையில் ) சர்க்கார் சாம குளம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டாராம்.

சுதாமாலிகா

கோவை பத்திரப்பதிவுத்துறையில் பணிபுரிந்து வரும் உதவி பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள பிரபாவதி பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வாயிலாக பணம் வாங்கிக்கொண்டு பணியிட மாறுதல்களை வாரி வழங்கி விட்டாராம் என்று ஒப்பாரி வைக்கிறார்கள் கோவை மாவட்ட பத்திர பதிவுத்துறை அலுவலர்கள் சிலர்.

பத்திரப் பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி சென்று விட்டாலும், அவரது விசுவாசிகளான பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள்சாமியும் அவருக்கு துணையாக இருக்கும் மற்றொரு உதவியாளரான சுதாமாலியா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, பிரபாபதியும் இவருக்கு துணையாக ஓய்வு பெற்ற முன்னாள் கூடுதல் ஐஜி ஜெகதீஷ் மற்றும் கோவை தெற்கு ஆடிட் டி.ஆர். சிவராஜ் போன்றோர்  பத்திரப்பதிவுத்துறையில் இருக்கும் வரை பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் தூய சக்தி முதல்வர் ஜோசப் விஜயால் ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மிடத்தில் சவால் விடுகிறார்கள் சில நேர்மையான பதிவுத்துறை அலுவலர்கள் சிலர்.!

-வே.மாரீஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *